Thursday, August 25, 2011

சரியாக தூங்கா விட்டால் மன அழுத்தம் ஏற்படும்

 
 
தூங்காதே  தம்பி  தூங்காதே என்ற பாட்டினை கேட்டிருப்பீர்கள்.ஆனால் தூங்கினால்தான் ஆற்றல் கிடைக்கும் என்பதையும் நாம் உணர வேண்டும். நாள் முழுவதும் உழைக்கும் நம்முடைய உடல் உறுப்புகள் ஓய்வெடுக்க தூக்கம் அவசியமாகிறது. சில நாட்கள் தூங்காமல் இருந்தால் ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து நோய் எதிர்ப்பு தன்மையும் குறையும்..
 
தசைகளோட வலிமையும் குறையும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்காது. உடல் வெப்ப நிலை  மாறுபடும். இது உடலுக்கு சிக்கலை உண்டாக்கும். உள்ளத்துக்கும் சிக்கலை ஏற்படுத்தும்.  தூங்காமல் இருந்தால் ரத்தத்தில் இருக்கும் மன அழுத்தத்திற்கு  காரணமான  கார்டிசோல் என்னும் ரசாயனத்தின் அளவு கூடுகிறது.
 
ஞாபக சக்தி குறைவு , வேலைகளில்  தவறுகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் உண்டாகும். உடலையும் மனசையும் சேர்த்து  பாதிக்கும் ஆற்றல் தூக்கமின்மைக்கு உண்டு . எளவே  தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு தூங்கி ஓய்வு எடுப்பது நல்லது.

No comments:

vedio

film