Monday, August 8, 2011

கரும்பு

 சித்த வைத்தியத்தில் கரும்பின் வேறு பெயர்களாக புனற்பூசம், இக்கு, வேய் என அழைக்கப்படுகிறது. மருத்துவப் பயன்பாட்டுக்கு கரும்புச்சாறு, சர்க்கரை, வேர் பயனாகிறது. இவை இனிப்பு சுவையுடையது. குளிர்ச்சித் தன்மை கொண்டது.
கரும்புச்சாறு : இதன் சாற்றை அதிகமாக சாப்பிட்டால் சந்தேக நோயுண்டாகும். மிதமாக சாப்பிட்டால் வெள்ளை, அழற்சி பெருக்கு அடங்கும்.
செங்கரும்பின் சாறு : இதன் சாறு பித்தத்தைக் குறைக்கிறது.
நல்ல வெல்லம் : இது பித்தத்தைப் போக்கிடும். வயிற்றுப் புழுக்களையும், நீரிழிவையும் ஏற்படுத்தும்.
பழுப்புச்சர்க்கரை : கரும்பின் சாற்றைக் காயச்சி சர்க்கரை செய்யப்படுகிறது. இது மருந்துகளுக்குத் தேவையாயுள்ளது. வாந்தி, பித்தம், சுவையற்ற தன்மையைப் போக்குகிறது. கெட்டியான சளியைக் கரைத்து சுகம் தருகிறது.
சீனிச்சர்க்கரை : இது வாத ஜுரம், வாத நோய், நுண்மையான புழு, விக்கல்களை நீக்குகிறது.
கற்கண்டு : சர்க்கரையைக் கொண்டு கற்கண்டு தயாரிக்கப்படுகிறது. இதில் சிறிதளவு எடுத்து சிறிதளவு பொரிகாரம் சேர்த்து 7 தினங்கள் சாப்பிட்டு வந்தால், விந்து நீர்த்தல் நீங்கும். மேலும் பல்லரணை, (ஈறு தடிப்பு) இருமல், வாந்தி ஆகியவை தீரும்.
சாறு : மிகவும் இனிப்பாக இருக்கும். விக்கலை நிறுத்தும். உடம்பு எரிச்சலைத் தணிக்கும். இதனுடன் தயிரும் சேர்த்துக் குடிக்கலாம்.
சர்க்கரை : சர்க்கரையைப் பாகு செய்து உணவுப் பொருட்களை நெடுநாள் சேமித்து வைக்கலாம். ஜலதோஷம், நீர்ப்பீனிச நோய்களைப் போக்கவும் தரலாம்.
* செம்பு, வெள்ளப் பாஷாணம் முதலிய விஷப்பொருட்களை சாப்பிட்டால் ஏற்படும் தொல்லைகளிலிருந்து சர்க்கரை மிகச் சிறப்பான விஷமுறிப்பாக செயல்படுகிறது.
* ஆறாத புண்களையும் குணமாக்க வழங்கப்படுகிறது.
* மஞ்சள் பெழுகும், சர்க்கரையும் சேர்த்து குழம்பாக்கி பருக்களின் மீது தடவி வந்தால் குணமாகிறது.
* கண்களில் தூசு, வலி, இரணம், நோய் ஆகியவற்றிற்கு சர்க்கரை ஒரு பங்குக்கு மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து கரைத்து ஒரு மணி நேரத்துக்கு 2 சொட்டு கண்களில் விட்டுவந்தால் நோயின் தாக்கம் குறையும்.
மேலும், இவற்றிற்கு இரவில் கண் இமைகளுக்கு சிற்றாமணக்கு நெய், ஓரங்களில் தேய்த்து, கண் இமை ஒட்டிக் கொள்ளாதபடி செய்வதுடன், காலையில் வெதுவெதுப்பான பாலும், நீரும் சேர்த்து கண்களைக் கழுவி வரவேண்டும்.
* நெடுநாள் நோயாளிகளாக உள்ளவர்களின் படுக்கை அறையில் சர்க்கரையை போட்டு புகையை ஏற்படுத்தினால் சுத்தமான காற்று ஏற்பட்டு அறை சுத்தமாகும்.
காடி : கருப்பஞ்சாற்றைப் புளிக்க வைத்தது காடி என அழைப்பர். இது பசியை உண்டாக்கி ஜீரணத்தை அதிகப்படுத்தும். தாகத்தைக் குறைக்கும். காடி ஒரு பங்கும், சுத்தமான நீர் 5 பங்கும் கலந்து ஈயம் போன்ற விஷங்களால் ஏற்படும் நோய்களுக்குத் தரலாம். இதற்கு முன்பு பேதிக்கு கொடுத்து அதன்பின் கையாள்வது நல்லது.
* தலைவலி, மயக்கம், தொண்டைப் புண், மூக்கில் நீர் ஒழுகல், ஆகியவற்றிற்கு இதன் ஆவியை நுகர வைத்தால் குணமேற்படும்.
* சிறுநீரில் இரத்தம் வெளியேறும் நோய்க்கு, காடியை தொடை, இடுக்கு ஆகிய இடங்களில் பூசினால் குணமாகும்.
* தேள், குளவி, தேனீ போன்றவை கொட்டினாலும், சில பயிர் பொருட்களின் உராய்வலால் ஏற்படும் தினவு, நமைச்சல் நோய்களுக்குப் பூசலாம். இதனைப் போன்றே மார்பக வீக்கத்தையும் கரைக்கலாம்.
ஆண், பெண் இணைப்பால் இரவில் உண்டாகும் மிகு வியர்வைக்கு கருப்பங்காடியை ஒரு பங்கு அளவும், நீர் இரண்டு பங்கு அளவும் கலந்து மார்பில் பூசி வந்தால் வியர்வை குறையும்.
வேர் : கரும்பின் வேரை முறைப்படி குடிநீரிட்டு கொடுத்து வந்தால் சிறுநீர் எரிச்சல் தணியும்.
கரும்பு
இதனை சரிபாதியாகப் பிளந்து திப்பிலிப் பொடி, ஏலக்காய்ப் பொடி இவற்றை நடுவாக வைத்து செம்மண் சீலையால் கட்டி கும்பி நெருப்பிலிட்டு பதமாகச் சுட்டு, பின்னர் சீலையை எடுத்து பின் பிழிந்து எடுத்த சாற்றினை விக்கலுக்குக் கொடுத்து வந்தால் தீரும். இதனைப் பல துண்டுகளாக வெட்டி, சுத்திகரிக்கப்பட்ட செம்புத்தூளை சட்டியிலிட்டு வறுத்து வெட்டிய துண்டுகளால் கடைந்தால் ஒருவகை பஸ்பம் உண்டாகும்.
இதனைச் செய்ய ஒரு பலம் செம்பு தூளுக்கு 4 கரும்புகள் கூட தேவையாகும். இதனைக் கொண்டு பல நோய்களைத் தக்க இணை மருந்துகளால் தீர்க்கலாம்.
யுனானி மருத்துவம்
கரும்பின் மருத்துவப் பயன்கள்
தோற்றம் : இது யாவரும் அறிந்த பிரபலமான ஒரு பொருளாகும். இது இரண்டு வகைப்படும். இதன் சாற்றிலிருந்து வெல்லம், சர்க்கரை, இனிப்பு மிட்டாய்கள் தயாரிக்கப்படுகிறது. இதன் ஒரு சிறந்தவகை ‘ப்போண்டா’ ஆகும். இது சாப்பிடுவதற்கு இனிப்பாகவும், மென்மையாகவும் இருக்கும்.
இயல்பு : உஷ்ணம், ஈரம்.
முக்கிய குணங்கள் : இதயத்திற்கு இன்பமளிக்கிறது. வயிற்றிலுள்ள அசுத்தத்தை வெளியேற்றுகிறது. சிறுநீரைப் பிரியச் செய்கிறது. உடலுக்குச் சக்தியும், பருமனும் அளிக்கிறது. வாய் துர்நாற்றத்தைப் போக்குகிறது.
பயன்படுத்தும் முறை
இதை அனைவரும் உரித்து சுவைத்துச் சாப்பிடுவார்கள். இதைத் தொடர்ந்து சாப்பிடுவதால் உடலுக்கு சக்தியும், பருமனும் கிடைக்கிறது. தடைப்பட்ட சிறுநீரை வெளியேற்றும் தன்மை உடையதால், சிறுநீர் கழிக்கும்போது உண்டாகும் எரிச்சலைத் தணிக்கிறது.
கரும்பை உரித்துத் துண்டு துண்டாக்கி பனியில் வைத்து விட வேண்டும். காலையில் இத்துண்டுகளைச் சாப்பிட்டால், சிறுநீர் கழிவதில் எரிச்சல், வெட்டை நோய் குணம்பெறுகிறது. சில நேரங்களில் சிறுநீரை அதிகளவில் வெளியேற்றும் தன்மையுடையதால் சிறுநீரகக் கற்களைக் கரைத்து வெளியேற்றுகிறது.

முக்கிய பயன்கள்
: உடலைப் பருமனடையச் செய்கிறது.
தீய விளைவுகள் : சளியை உண்டாக்கும்.
தீயவிளைவுகளைச் சரிசெய்யும் முறை : இத்துடன் அனீசூன் கலந்து பயன்படுத்த வேண்டும்.
சர்க்கரையின் மருத்துவ பயன்கள்

தோற்றம்
: சர்க்கரை யாவரும் அறிந்த ஒன்றாகும். சர்க்கரை பல பொருட்களிலிருந்து பெறப்படுகிறது. சர்க்கரையைப் பற்றி மட்டுமே இங்கு சொல்லப்படுகிறது. இது வெள்ளைச் சர்க்கரை, சிவப்பு சர்க்கரை என இருவகையாகக் கிடைக்கும். வெண் சாக்கரையை பாகுச் செய்து, காயவைத்து கற்கண்டு, பலவகையான மிட்டாய்கள் தயாரிக்கப்படுகிறது.
இயல்புகள் : வெண் சர்க்கரை - வெப்பம், சிவப்புச் சர்க்கரை-ஈரம், சிவப்பு சர்க்கரை வெண்சர்க்கரையை விடச் சற்று வெப்பமானது. நாளடைவில் சாக்கரையின் ஈரத்தன்மை குறைந்து வறட்சி மிகுந்துவிடும்.
முக்கிய குணங்கள்
சர்க்கரையானது நாற்றத்தை விலக்குகிறது. அழுகுவதைத் தடுக்கிறது. அதிகளவில் உட்கொண்டால் உடல் மென்மைப்படும். சிவப்புச் சர்க்கரை இலேசான வயிற்றுப் போக்கை உண்டாக்கும். வயிற்றுக்குச் சக்தியை அளிக்கும். வேக்காட்டை உண்டாக்கும். காயங்களில் தூவினால் அவை குளிர்ச்சியடைகின்றன. அழுக்கைப் போக்கும். எளிதில் செரிமானமாகாது.
மருந்து, லேகியங்களில் பூசணம் பூத்து விடமாலிருக்கவும், அதன் சுவை கெடாமல் இருக்கவும், சக்தியைத் தக்க வைத்துக் கொள்ளவும் சர்க்கரையை அதிகளவில் பயன்படுத்துவர். லேகியங்கள், முரப்பாக்கள், ஷர்பத்துக்கள் இவை சர்க்கரைப்பாகு கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
ஊறவைத்த மருந்துகளில் சர்க்கரையைக் கலந்து இன்சுவையுண்டாக்கிப் பருகக் கொடுப்பர். எளிய மலபந்தத்தை நீக்க சிவப்புச் சர்க்கரையைப் பாலில் கலந்து பருக வைப்பர். உணவு செரிமானமாக, உணவு உண்ட பிறகு சிறிதளவு சர்க்கரையை உண்பர். சாக்கரையை உணவில் அதிகம் பயன்படுத்தினால் சோம்பல் ஏற்படும். பருமனானவர்க்கு அதிக இரத்த உற்பத்தியில் உடல் சிவக்கும்.

தீய விளைவுகள்
: வெப்ப உடலினருக்கு இது தீமையை விளைவிக்கும். பாதாம், பால் போன்றவற்றால் இத்தீமையைப் போக்கலாம்.
சிறப்புப் பயன் : கல்லீரலுக்கு ஊட்டமளிக்கும்.

மாற்று மருந்து
: துரன்ஜபின்.
அளவு : வயிற்றுப்போக்கு உண்டாக்க 48 கிராம் முதல் 60 கிராம் வரை.
வெல்லத்தின் மருத்துவ பயன்கள்
தோற்றம்
: இது யாவரும் அறிந்த ஒரு பொருளாகும். கரும்புச்சாறிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதன் பாகுவைக் காயவைத்துக் கைகளால் நிமிட்டினால் பொடியாகிவிடும். இதற்குச் சிவப்புச் சர்க்கரை என்று பெயர்.
இயல்பு : உஷ்ணம் - வறட்சி.
பழைய வெல்லம் - உஷ்ணம் - வறட்சி.
முக்கிய குணங்கள் : உடலுக்கு உஷ்ணத்தையும், மென்மையையும் அளிக்கிறது. சளியை வெளியேற்றுகிறது. உணவைச் சிறிதளவே ஜீரணிக்கிறது. வீக்கத்தைக் கரைக்கிறது. துர்நாற்றத்தைப் போக்குகிறது. பாகில் செய்யப்பட்ட லேகியங்கள் மற்றும் மூலிகை மருந்துகளைக் கெடாமல் பாதுகாக்கின்றது.

குண்டான உடலை இளைக்கச் செய்வதில் கரும்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கரும்புச் சாற்றில் உள்ள ரசாயனங்கள், உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரையச் செய்கிறது. இதன் மூலம் உடல் எடை குறைகிறது. எடை குறைவதால் ஏற்படும் உடல் சோர்வையும் கரும்பு சாறு தடுக்கிறது. ரத்த அழுத்தத்தையும் இது கட்டுப்படுத்துகிறது. உடலில் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.
பயன்படுத்த தொடங்கிய 12 வாரங்களில் இதன் பலன் வெளிப்படையாக தெரிய வரும். பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாமல், உடல் எடையை குறைக்க கரும்பு பயன்படுகிறது.
இவ்வாறு அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பயன்படுத்தும் முறை
இது அதிகளவில் தின்பண்டமாகப் பயன்படுகிறது. குறிப்பாக சோர்வை நீக்கவும், வாய் வேக்காட்டைத் தணிக்கவும் உட்கொள்ளப்படுகிறது. வயிற்றுப் போக்கை உண்டாக்கும் மருந்துடன் கலந்து பயன்படுத்துவார்கள்.
உண்ட உணவு ஜீரணிக்க இதைச் சிறிதளவில் சாப்பிடுவார்கள். இதை அதிகளவில் சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு உண்டாகும். வயிறும் உப்புசம் அடைந்துவிடும்.
வீக்கத்தைக் கரைக்கவும், புண்களில் உள்ள அசுத்தத்தை நீக்கவும், காயங்களை ஆற்றவும் இதைக்கொண்டு தயாரிக்கப்படும் களிம்பால் பற்றுப் போடப்படுகிறது. சக்தி வாய்ந்த மருந்து கெடாமல் இருக்க தேனுக்குப் பதிலாக இதன் பாகில் லேகியங்கள் தயாரிக்கப்படுகிறது.
அளவு : லேசாகப் பேதியை உண்டாக்க, மற்ற மருந்துகளுடன் 48 கிராம் முதல் 54 கிராம் வரை கலந்து பயன்படுத்தலாம்.


கரும்புக்கு பிற்காலத்தில் வேழம், கன்னல், கழை எனவும் பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. கழைக் கரும்பு என கீரன் எயிற்றியனார் என்னும் புலவர் வேறுபடுத்திக் காட்டியுள்ளார். கரும்பு புதர்செடி, இதற்கு நீர் மிகுதியாக வேண்டப்படும். அதனால் நீர்ப்பிடிப்பான வயல்களில் பயிரிடப்படுகிறது. இதில் பல கணுக்கள் காணப்படும். ஆடும் துணிக்கொடிகளைப்போல இருக்கும் என புலவர் உருத்திரங்கண்ணனார் பாடியுள்ளார்.

தலவிருட்சம் கொண்ட திருக்கோயில்கள்

திருவெண்ணியில் உள்ள வெண்ணிக்கரும்பர் - அழகிய நாயகி கோயில் தலவிருட்சமாக கரும்பு வணங்கப்படுகிறது.
இது, கோயில் வெண்ணி இரயில்வே நிலையத்திலிருந்து 1/2 மைல் தொலைவில் உள்ளது. தற்போது இக்கற்கோயில் கோலிலுண்ணி என் அழைக்கப்படுகிறது.
அழகிய வேலைப்பாடுகள் அமைந்த இக்கோயிலில் உள்ள சுவாமி கருப்பங்கழிகளை ஒன்று சேர்த்து வைத்தது போல உருவம் கொண்டுள்ளது. இந்த லிங்கத்தில் கரும்பு போன்ற ரேகைகள் உள்ளன.
சுயம்பு லிங்கம், மிக அழகிய விக்கிரங்கள் உள்ளன. திருஞானசம்பந்தர், அப்பர் ஆகிய சமயக்குரவர்களால் பாடல் பெற்ற தலம். இது தஞ்சாவூர் கல்வெட்டுகளில் வெண்ணக் கூற்றம் எனக் குறிக்கப்பட்டுள்ளதாக குறிப்புகளில் காணக்கிடைக்கின்றன.
மேலும் திருவேடகம், ஆப்பனூர், திருமாணிகுழி, காஞ்சியிலுள்ள கரும்பூர் சிவ ஆலயங்களில் கரும்பு தலவிருட்சமாக வணங்கப்படுகிறது. மேலும், செங்கரும்பு கொள்ளிடக்கரையோரம், இட்சுவணேசுவரம், உறையூர் சிவ ஆலயங்களின் தலவிருட்சமாகவும் விளங்குகிறது.

குண்டான உடலை குறைக்க ஆண்களும், பெண்களும் பல்வேறு வழிமுறைகளை கடைப்பிடிக்கின்றனர். நடை பயிற்சி, கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்கின்றனர். விளம்பரங்களை நம்பி மாத்திரை, லேகியம் போன்றவற்றையும் வாங்கிச் சாப்பிட்டு, எப்படியாவது உடல் எடையை குறைக்க முயற்சிக்கின்றனர்.
இப்போது, சிரமமே இல்லாத செலவே பிடிக்காத வழிமுறையை கண்டு பிடித்து, மருத்துவ வல்லுனர்கள் வெளியிட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள உணவு உயிர் தொழில்நுட்ப வல்லுனர் ஆங்குர் தேசாய் மற்றும் லா ட்ரோப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் வருமாறு:-
 சங்க இலக்கியம் ‘கரும்பு’ சக்கரம் ஆஃபிசினேரம் () என்னும் அறிவியல் பெயர் கொண்டது. ‘கிராமினே’ என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.
தாவரவியலுள் இது ஒரு வகையான புல் எனப்படும். தொல்காப்பியமும் இதனைப் ‘புல்’ எனக் கூறுகிறது.
தொன்றுதொட்டு தமிழ் நாட்டில் வளர்க்கப்படும் கரும்பு, அதியமானின் முன்னோரால் அவர் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது என்று ஒளவையார் கூறுவர். உலகிற்கு சுவையான சர்க்கரை கரும்புச் சாற்றிலிருந்து பெறப்படுகின்றது.
சங்க இலக்கியப் பெயராக இவை ‘கரும்பு’ என்றே அழைக்கப்படுகின்றது. அந்தரத்து பெறுதற்குறிய “அமிர்தம் போன் கரும்பை இங்கு தந்தவனுடைய வழித்தோன்றலே” என்று பாடல் தொடங்குவதை சுட்டிக்காட்டி கரும்பு தொன்று தொட்டு தமிழ்நாட்டில் பயிரிடப்படுகிறது. இது முதன் முதலாக தென தமிழ்நாட்டில் தோன்றியிருக்கக்கூடும் என்றும் தாவரவியல் அறிஞர்கள் அறிவியல் அடிப்படையில் கூறியுள்ளனர்.
மெல்லிய வெண்மை நிறமான மணமற்ற இதன் பூக்களை ஆண் குருவி தனது இணையின் எதிர்கால நலனுக்கு, கூடு கட்டும் பொருட்டு எடுத்துச் செல்லும் எனவும் பாடியுள்ளனர் புலவர்கள்.
இனிய சுவைச்சாற்றால் உலகத்திற்கே இனிப்பை வழங்கும் பெருமை கொண்ட இத்தாவரம் இந்தியாவிலும், சீனாவிலும் பயிரிடப்படுகிறது.
கரும்பிலிருந்து சாறு பிழிந்து எஞ்சிய சக்கை, காகிதம் செய்வதற்குப் பயன்படும். இதன் இலைகள் மக்கிப் போய் நல்ல எருவாகவும் விளங்குவதாக இலக்கிய குறிப்புகள் தெரிவிக்கின்றன.

No comments:

vedio

film