Monday, August 1, 2011

இளம்பிள்ளை வாதம்


போலியோ நோய்தொற்று முழு உடலையும் பாதிக்கக்கூடியது. ஆனாலும் இந்நோய் எப்போதும் நரம்புகள் மற்றும் தசைகளை பாதிக்கிறது.
காரணங்கள்
வைரஸ் நோய் தொற்றுவினால் போலியோ ஏற்படுகிறது
மனிதனின் மலம் மற்றும் கழிவுகளில் போலியோ வைரஸ் காணப்படும். இவ்வைரஸினால் மாசுபட்ட உணவுகளை உட்கொள்ளும் போது போலியோ பரவுகிறது. மனித மலம் கழிவுகள் மூலம் மாசுபட்ட குடிதண்ணீர் அல்லது கிணறு/குளங்கள்/ஏரிகள் போன்றவற்றின் நீரில் நீந்தும் போதோ, குளிக்கும் போதோ அல்லது குடிக்கும் போதோ போலியோ  வளர்ந்த பிள்ளைகள் மற்றும் வாலிபர்களைகளில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பெரும்பாலான வேலைகளில், இவ்வகை வைரஸ் மலத்திலிருந்து வாய் வழியாகவே ஒரு நபரிலிருந்து மற்ற நபருக்கு பரவுகிறது.
இவ்வகை வைரஸ் மூக்கு அல்லது வாய் வழியாக நுழைந்து, பின்னர் குடல் பகுதியை சென்றடைகிறது. குடல் செல்களில் எண்ணிக்கையில் பெருக்கம் அடைகின்றது. பின்னர் இவ்வைரஸ்கள் மலத்தின் மூலம் வெளியேற்றப்படுகிறது (சில வாரங்களில்). இப்படியாக வாழ்க்கை சுழற்சியை புதுப்பித்து, முழு சமுதாயத்திற்கும் ஆபத்தினை விளைவிக்கும் இடற்களை ஏற்படுத்துகிறது.
அறிகுறிகள்
மிதமான நோய்தொற்று
மூளை மற்றும் தண்டு வடத்தில் நடுத்தரமான நோய்தொற்று
மூளை மற்றும் தண்டுவடத்தில் மோசமான நோய் தொற்று
பெரும்பாலான நிகழ்வுகளில், நோயாளிகள் எந்த அறிகுறிகளும் இன்றி காணப்படுவர். காணப்படும் அறிகுறிகளாவன,
 • ப்ஃளு போன்ற அடையாளங்கள்
 • வயிற்று வலி
 • வயிற்றுப் போக்கு/பேதி
 • வாந்தி
 • தொண்டை வறட்சி
 • மிதமான காய்ச்சல்
 • தலைவலி

 • மிதமான நோய்தொற்றுவில் ஏற்படும் அனைத்து அடையாளங்கள்.
 • நடுத்தரமான காய்ச்சல்
 • கழுத்து விரைத்துப் போதல்
 • முழங்காலின் பின்பகுதியில் உள்ள தசைகளில் மிருதுவாகும் மற்றும் வலி தோன்றும்.
 • முதுகு வலி
 • வயிற்று வலி
 • தசைகள் விரைத்துப் போதல்
 • பேதி
 • தோலில் கொப்புளங்கள்.
 • அதிகப்படியான பெலவீனம் அல்லது சோர்வு
 • கை, கால்களில் உள்ள தசைகள் பெலவீனமடைதல் மற்றும் தசைகள் செயலிழப்பு வேகமாக ஏற்படுதல்.
 • தசையில் வலி, தசை மென்மையாதல் மற்றும் தசை பிடிப்பு (கழுத்து, முதுகு, கைகள் அல்லது கால்களில்)
 • கழுத்தை அசைத்தல், கை அல்லது காலை தூக்குவது  போன்ற செயல்களை செய்ய முடியாமல் போதல்
 • வயிறு வீக்கமடைதல்
 • முகபாவனை செய்வது கஷ்டமாதல்
 • மலம் மற்றும் மூத்திரம் கழிப்பதில் பிரச்சினை ஏற்படுதல் (மலச்சிக்கல்)
 • உணவு மற்றும் தண்ணீரை விழுங்குவது கஷ்டமாதல்
 • சுவாசிப்பதில் கடினதன்மை
 • வாயிலிருந்து எச்சில் வடிந்து கொண்டிருத்தல்
ஏற்படக்கூடிய சிக்கல்கள்
இதய தசைகளில் நோய்தொற்று ஏற்படலாம். கோமா எனும் சுயநினைவு இழத்தல் மற்றும் மரணம்.
இடர் காரணிகள் / ஆபத்தான காரணிகள்
 • சிறுபிள்ளைகளுக்கு போலியோ ஏற்படும் அதிக ஆபத்து உள்ளது. கழிவரைளில் மலம் கழிக்கும் பழக்கம் கற்றறியாத பிள்ளைகளை குறிப்பாக பாதிக்கிறது.
 • போலியோ தடுப்பு ஊசி எடுத்துக் கொள்ளாத பெரியவர்கள்.
 • இந்நோய் கண்ட நபரின் மலத்தின் மேல் மொய்க்கும் ஈக்கள் உண்ணும் உணவின் மேல் உட்கார்ந்து உணவை மாசுபடச் செய்யும் சூழலுள்ள பகுதிகள்.
 • இந்நோய்க் கிருமியுள்ள குடிதண்ணீர் (கழிவு நீர் தேங்கியுள்ள பகுதிக்கு அருகாமையில்)
 • எயிட்ஸ் மற்றும் புற்றுநோய் போன்றவை ஏற்பட்டு உடலின் நோய் எதிர்ப்பு தன்மை குறைந்து காணப்படும் போது.
சுரவாத காய்ச்சலுக்கான அறிகுறிகள்
·குழந்தை எப்போதும் அழுதுகொண்டே இருக்கும்.
·மலச்சிக்கல் உருவாகும். 
·3 நாள் முதல் 8 நாள் வரை காய்ச்சல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

காய்ச்சலின் வேகம் அதிகரிப்பதால் இடுப்புப் பகுதி செயலிழந்துவிடுகிறது.  வாதத்தில் அதிகம் பாதிக்கப் படும் வாதம் சுரவாதம்  என்பதால் இதனை முதலில் வைத்துள்ளனர்.

இந்த சுரவாதமானது தாயின் வயிற்றில் கரு உற்பத்தியாகும்போதும், 10 மாதம் அதாவது 300 நாட்கள் வயிற்றில் வளரும்போதும் அந்த தாய்க்கு மன அழுத்தம், மனக் கவலை, மன உளைச்சல், திடீர் அதிர்ச்சி, பயம், காமம், கோபம் போன்றவற்றால் உடலில் உள்ள தச வாயுக்கள் பாதிப்படைகின்றன.  அக்டோபர் இதழில் இதைப்பற்றி தெளிவாக அறிந்திருப்பீர்கள்.

தாய்க்கு மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு, வாயுத் தொல்லை இருந்தால்கூட குழந்தை பிறந்தபிறகும் இந்த சுரவாத நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.  இளம்பிள்ளை வாதம் என்பது உலகையே ஆட்கொள்ளும் கொடிய நோயாகும்.  இந்த நோயின் தன்மை பற்றி அகத்தியர் எழுதிய நூல்கள் அனைத்தும் நமக்குக் கிடைத்த பொக்கிஷம் ஆகும்.

குழந்தை தொப்புள் கொடி சுற்றி பிறப்பதும் இந்த பாதிப்பால்தான்.  அறுவை சிகிச்சை செய்து குழந்தை எடுப்பதும் இத்தகைய பாதிப்பால்தான்.

அளவுக்கு அதிகமான கால்சியம், இரும்பு, வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடுவதால் தாயின் குடலில் புண் ஏற்பட்டு அதனால் குழந்தைக்கு பாதிப்பு எற்படுகின்றது.

ஈரத்தலையுடன் பால் கொடுப்பதால் சுரவாதம் ஏற்பட வாய்ப்பாகிறது.

பொதுவாக இந்த நோயானது கருவிலிருக்கும் போது இருக்கும். குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் அருந்தும்போது தாய்க்கு உடலில் நோய் தாக்கினால் அது பாலின் வழியாக குழந்தைக்கு சென்று தாக்கும்போது சுரவாதத்தின் தன்மை வெளிப்படும்.

அதிமதுரம் - 5 கிராம்,  நற்சீரகம் - 5 கிராம், ஜடமாஞ்சி - 5 கிராம், சாரணைவேர்- 5 கிராம், வில்வவேர் - 5 கிராம்,  முடக்கத்தான் - 5 கிராம், குறுந்தொட்டி - 5 கிராம் இவற்றை இடித்து சலித்து 1 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து 200 மிலி ஆகும் பக்குவம் வரை காய்ச்சி பின் இளநீர் விட்டு மீண்டும் சிறிதுநேரம் கொதிக்க வைத்து ஆறிய பின்பு வடிகட்டி காலை அல்லது மாலை ஒருவேளை மட்டும் 1/2 டம்ளர் வீதம் அருந்தி வர வேண்டும்.  கசப்புத் தன்மை இருக்காது.  இந்த கஷாயத்தை கர்ப்பமான நான்காவது மாதத்திலிருந்து குழந்தை பிறக்கும்வரை அருந்தி வந்தால் குழந்தைக்கு எந்தவிதமான வாத நோயும் தாக்காது.

அகத்தியர் வர்ம கண்டி,  அகத்தியர் பாலவாகடம் போன்ற நூல்கள் மூலம் தெளிவாக விளக்கியுள்ளார்.

 
போலியோவை தடுத்துக் காக்க
 • உங்களையும் மற்றும் உங்கள் சுற்றுச்சூழலையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல்.
 • பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடுதல் (தடுப்பூசி அட்டவணையினைப் பார்க்க)
 • ஊட்டச்சத்துள்ள ஆகாரத்தை உட்கொள்ளுதல்.
 • கருவில் குழந்தை வளரும்போது தாய்க்கு எந்தவிதமான மன அழுத்தம், மன உளைச்சல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
 • இதற்காகவே நம் முன்னோர்கள் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு என்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்கள். சுற்றத்தாரும், சொந்தங்களும் அப்பெண்ணை வாழ்த்தும்போது அவள் உள்ளம் மகிழும். அப்போது குழந்தை நன்கு ஆரோக்கியமாக வளரும்.
 • மலச்சிக்கல் ஏற்படுத்தும் உணவுகளை தவிர்ப்பது நல்லது.  வாயுவை உண்டாக்கும் பொருட்களை சாப்பிடக் கூடாது.

No comments:

vedio

film