Saturday, July 2, 2011

ஆரோக்கியம் தரும் திணை

 திணை என்பது ஒரு வகை தானியமாகும். ஆங்கிலத்தில் இது மில்லட் எனும் வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ள தானியமாகும். ஆங்கிலத்தில் மில்லட்   என்பது சோளம், கம்பு கேப்பை (கேழ்வரகு) போன்ற தானிய வகையைக் குறிப்பதாகும். இதில் சைனீஸ் மில்லட், ஜெர்மன் மில்லட், ஹங்காரியன் மில்லட்,  எனும் விதம் விதமான தானியங்கள் அடங்கிய ஒரு வகைப்பாடு ஆகும். இதில் தினை என்பது நரி வாலைப் போல பச்சை நிறத்தில் காட்சியளிப்பதால் இதை ஃபாக்ஸ் டைல் மில்லட்  என அழைக்கப்படுகின்றது.
தினை உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் இரண்டாவது தானிய வகையாகும். இதில் இந்தியா இரண்டாவது இடத்தையும் சீனா முதலிடத்தையும் வகிக்கின்றன. பழங்காலத்தில் முதலாவதாக பயிரிடப்பட்டு மனிதனால் உபயோகிக்கப்பட்ட தானிய வகை தினை தான். அதுவும் 6000 கி.மு விலேயே சீனாவில் பயிரடப்பட்டு உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது.
தற்பொழுதும் சீனாவின் வட மாநிலங்களில் அதிகம் பயிரிடப்பட்டு உபயோகமாகி வரும் தானியம் தினை. தினை என்றவுடன் தமிழ் கடவுள் முருகப் பெருமான் வயதான தோற்றத்துடன் சென்று வள்ளியிடம் சாப்பிட தினை மாவு கேட்டதாகவும், பின் வள்ளியை திருமணம் செய்ததாகவும் புராணத்தில் படித்த கதைகள் நம் நினைவுக்கு வரும். இதிலிருந்து, புராண காலம் தொட்டே தினையை பயன்படுத்தி வந்தது நமக்கு புரியும்.
தினை இந்தியாவில் பயிராகும் ஒரு வகை உணவுப் பொருளாகும். தினை மாவு அதிக சத்து கொண்ட உணவுகளில் ஒன்று.இதற்கு இறடி, ஏளல், கங்கு என்ற வேறு பெயர்களும் உண்டு.சன்னிகரம் ஐயத் தனிவாதமும் போகுந்துன்னுபித் தத்தைமிகத் தூண்டிவிடுந் – தின்னப்பினையும் பசியாம் பெருவீக்கம் நீக்குந்
தினையரிசி யின்குணத்தைத் தேர்- அகத்தியர் குணபாடம்-
பொருள் – சன்னிசுரம், வளிநோய் போன்றவற்றை போக்கும்.
பசியுண்டாக்கும். தீக்குற்றத்தைப் போக்கும்.
உடல் வலுப்பெற
நம் முன்னோர்களின் உணவுகளான அரிசி, கேழ்வரகு, கம்பு, வரகு, தினை முதலியனவாக இருந்தது. இதனால் அவர்களின் உடலானது தேக்கு மரம் போல் திடமாக இருந்தது. இன்று இவற்றின் உணவுப் பயன்பாடு குறைந்து கடைசியாக அரிசியையும் தவிடு நீக்கி, பாலீஷ் செய்து சாப்பிடும் நிலைக்கு வந்து விட்டோம்.
இதனால் இன்று உடல் வலுவிழந்து நோயின் பாதிப்புக்கு ஆளாகிறது.
இப்படி நாம் இழந்த பொருட்களுள் தினையும் ஒன்று. மலைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேனும், தினைமாவுமே உணவாக இருந்தது. தற்போது அவர்களும், தினை என்றால் என்ன என்று கேட்கின்றனர். தினையில் உடலுக்குத் தேவையான புரத சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.
நமது வாசகர்களுக்கு உதவும் விதமக அக்காலத்தில் புகழ் பெற்ற தினையை இக்கால முறைப்படி எவ்வாறு எளிதாக தங்கள் அன்றாட உணவில் இடம்பிடிக்க வைக்கலாம் என இதோ சில யோசனைகள்.
திணை இனிப்பு பொங்கல்
தேவையான பொருட்கள்
திணை அரிசி - 200 கிராம்
வெல்லம் - 300 கிராம்
பாசி பருப்பு - 1/2 கரண்டி
நெய் - 100 கிராம்
தேங்காய் - 1/2 மூடி துருவியது
ஏலக்காய் - 4 அல்லது 5
முந்திரி, திராட்சை - 25 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
திணை அரிசியையும், பாசிபருப்பையும் மூன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். நன்றாக குழைந்து வெந்தவுடன் வெல்லம், சிட்டிகை உப்பு சேர்க்கவும். வெல்ல வாசனை மறையும் வரை நன்றாக கிளரவும். பின்பு அடுப்பிலிருந்து இறக்கி வைத்து அதனுடன் தேங்காய், ஏலக்காய், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.
திணை கார பொங்கல்
தேவையான பொருட்கள்
திணை அரிசி - 100 கிராம்
பாசி பருப்பு - 50 கிராம்
நெய் - 100 கிராம்
மிளகு - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
முந்திரி - 25 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
திணை அரிசியையும், பாசி பருப்பையும் மூன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். மிளகு, சீரகம், முந்திரி, கறிவேப்பிலை ஆகியவற்றை நெய்யில் வறுக்கவும். இவற்றை உப்புடன் பொங்கலில் சேர்க்கவும்.
குறிப்பு
இதனுடன் தேங்காய் சட்னி, புதினா சட்னி அல்லது சாம்பார் தொட்டு கொள்ளலாம்.
திணை இனிப்பு பனியாரம்
தேவையான பொருட்கள்
திணை அரிசி - 100 கிராம்
பச்சை அரிசி - 100 கிராம்
உளுத்தம் பருப்பு - 1/2 டம்ளர்
வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன்
வெல்லம் - 200 கிராம்
செய்முறை
திணை அரிசி, பச்சை அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் இந்நான்கையும் மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து நன்கு அரைக்கவும். தண்ணீரில் வெல்லத்தை பொடி செய்து சேர்த்து அதை அரைத்து வைத்து மாவுடன் சேர்த்து கலக்கவும். பணியார சட்டியை அடுப்பில் வைத்து அதன் குழிகளில் எண்ணெய் விட்டு வைக்கவும். அதில் மாவை ஊற்றி வேக வைக்கவும். பொன் நிறமாக வெந்தவுடன் அடுப்பிலிருந்து எடுக்கவும்.
திணை கார பனியாரம்
தேவையான பொருட்கள்
திணை அரிசி - 100 கிராம்
பச்சை அரிசி - 100 கிராம்
உளுத்தம் பருப்பு - 50 கிராம்
வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
வறுப்பதற்கு
பெரிய வெங்காயம் - 4
உளுத்தம் பருப்பு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
திணை அரிசி, பச்சை அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் இந்நான்கையும் மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து அரைக்கவும். உப்பு சேர்த்து 5 முதல் 6 மணி நேரம் வரை ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு அதில் வெங்காயம், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வறுக்கவும். பின்பு அதனுடன் அரைத்து வைத்த மாவை சேர்த்து, பணியார சட்டியில் ஊற்றி, பொன் நிறமாக ஆகும் வரை வேகவிடவும்.
திணை கீரை ரொட்டி
தேவையான பொருட்கள்
திணை மாவு - 1/2 கிலோ
முருங்கை இலை - 1 கட்டு
நெய் - தேவையான அளவு
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
திணை மாவு, உப்பு, மிளகுத்தூள், கீரை இவைனைத்தையும் தேவையான அளவு நீர் விட்டு பிசைந்து கொள்ளவும். பின்பு அதை உருண்டையா உருட்டி, சப்பாத்தி திரட்டவும். அடுப்பில் தவாவை வைத்து அதில் திரட்டிய சப்பாத்தியை போட்டு, அதை சுற்றி நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
திணை பூர்ண கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்
திணை மாவு - 1/2 கிலோ
வெல்லம் - 1/4 கிலோ
தேங்காய் - 2
ஏலக்காய் - 5 கிராம்
உப்பு - 1 சிட்டிகை
செய்முறை
தேங்காயை துருவிக் கொண்டு, வெல்லத்தை தூளாக்கிக் கொள்ளவும். மேலும் இவற்றுடன் ஏலக்காய் சேர்த்து அடுப்பில் வைத்து கெட்டியாகும் வரை கிளரவும். 1/4 லிட்டர் தண்ணீரை உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்பு திணை மாவை அதில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளரவும். அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். அதனுள்ளே செய்து வைத்துள்ள பூர்ணத்தை வைத்து உருட்டி, இட்லி தட்டிலே வைத்து வேக வைத்து எடுக்கவும்.
திணை கார கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்
திணை மாவு - 1/4 கிலோ
தேங்காய் - 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 11/2 ஸ்பூன்
மிளகுத்தூள் - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
நெய் - தாளிப்பதற்கு
செய்முறை
திணை மாவுடன் உப்பு மற்றும் துருவிய தேங்காயை சேர்க்கவும். வாணலியிலில் நெய் விட்டு அதில் உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். திணை மாவையும் தேவையான அளவு தண்ணீரையும் சேர்த்து நன்கு கிளரவும். அடுப்பிலிருந்து இறக்கி மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லி தட்டில் வைத்து வேக விடவும்.
குறிப்பு
இதற்கு தொட்டுக் கொள்ள கொத்தமல்லி அல்லது புதினா சட்னி செய்யலாம்.
திணை பக்கோடா
தேவையான பொருட்கள்
திணை மாவு - 100 கிராம்
கடலை மாவு - 50 கிராம்
சின்ன வெங்காயம் - 200 கிராம்
இஞ்சி - சிறிய துண்டு
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
திணை மாவு, கடலை மாவு மற்றும் அதனுடன் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, நறுக்கிய இஞ்சி, மஞ்சள் தூள், உப்பு அனைத்தையும் ஒன்றாக கலந்து அதனுடன் 2 ஸ்பூன் சுட்ட எண்ணெய் விட்டு, தேவையான அளவு நீர் சேர்த்து பிசிறினார் போல பிசைந்து கொள்ளவும். பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள பக்கோடா மாவை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
திணை பாயாசம்
தேவையான பொருட்கள்
திணை மாவு - 200 கிராம்
சர்க்கரை - 1 1/2 டம்ளர்
ஏலக்காய் - 4 அல்லது 5
முந்திரி - 10 கிராம்
திராட்சை - 10 கிராம்
நெய் - தேவைக்கேற்ப
செய்முறை
ஒரு பாத்திரத்தில் 4 டம்ளர் நீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். அதில் கழுவிய திணை அரிசியை சேர்த்து நன்கு வேக வைக்கவும். அதனுடன் சர்க்கரை சேர்த்து 10 நிமிடத்திற்கு கிளரவும். பின்பு வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். 3 நிமிடம் கழித்து ஏலப்பொடி சேர்க்கவும்.
திணை இட்லி
தேவையான பொருட்கள்
திணை அரிசி - 400 கிராம்
வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டம்ளர்
உப்பு - தேவைகேற்ப
செய்முறை
திணை அரிசி, வெந்தயம் ஊற வைக்கவும். உளுத்தம் பருப்பை தனியாக ஊற வைக்கவும். தனித்தனியாக அரைத்து எடுக்கவும். பின்பு இரண்டு மாவையும் உப்புடன் கலக்கவும். நான்கிலிருந்து ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும். மாவை இட்லி தட்டில் ஊற்றி வேக வைக்கவும்.
திணை இனிப்பு புட்டு
தேவையான பொருட்கள்
திணை மாவு - 1/2 கிலோ
சர்க்கரை - 150 கிராம்
தேங்காய் - 1
ஏலக்காய் - 1 சிட்டிகை
உப்பு - சிறிதளவு
செய்முறை
தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். திணை மாவுடன் உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து பிசறி வைத்துக் கொள்ளவும். பின்பு குக்கரில் வைத்து வேக வைத்து வெந்தவுடன் ஒரு தட்டில் பரப்பி வைக்கவும். அதனுடன் சர்க்கரை, துருவிய தேங்காய், ஏலப்பொடி சேர்க்கவும்.
திணை இனிப்பு இடியாப்பம்
தேவையான பொருட்கள்
திணை மாவு - 1/2 கிலோ
சர்க்கரை - 200 கிராம்
தேங்காய் - 1
ஏலக்காய் - 5 அல்லது 6
உப்பு - தேவையான அளவு
செய்முறை
தண்ணீரை கொதிக்க வைத்து அதில் திணை மாவை சேர்த்து கிளரவும். அந்த மாவை இடியாப்ப அச்சில் இட்டு பிழிந்து வேக வைத்து எடுக்கவும். கடைசியாக அதில் தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலப்பொடி சேர்க்கவும்.
உணவு நலம் ஜுன் 2010
ஆரோக்கியம், தரும், திணை, மில்லட், சோளம், கம்பு, கேழ்வரகு, சைனீஸ், மில்லட், ஜெர்மன், மில்லட், ஹங்காரியன், மில்லட்,  தானியங்கள், ஃபாக்ஸ், டைல், மில்லட்,  இந்தியா, பழங்காலம், மனிதன், வட மாநிலங்கள், மாவுசத்து,
உடல், அரிசி, கேழ்வரகு, கம்பு, வரகு, தினை, தேக்கு மரம், நோய், புரத சத்து, ஊட்டச்சத்து, திணை, இனிப்பு, பொங்கல், செய்முறை, திணை அரிசி, பாசி பருப்பு, வெல்லம், திணை, கார, பொங்கல், செய்முறை, திணை அரிசி, பாசி பருப்பு, மிளகு, திணை, இனிப்பு, பனியாரம், செய்முறை, திணை அரிசி, பச்சை அரிசி, வெல்லம், திணை, கார, பனியாரம், செய்முறை, திணை அரிசி, பச்சை அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம், திணை, கீரை, ரொட்டி, செய்முறை, திணை மாவு, உப்பு, மிளகுத்தூள், கீரை, திணை, பூர்ண, கொழுக்கட்டை, செய்முறை, திணை மாவு, தேங்காய், வெல்லம், திணை, கார, கொழுக்கட்டை, செய்முறை, திணை மாவு, தேங்காய், உளுத்தம் பருப்பு, மிளகு, திணை, பக்கோடா, செய்முறை, திணை மாவு, கடலை மாவு, வெங்காயம், திணை, பாயாசம், செய்முறை, திணை மாவு, சர்க்கரை, முந்திரி, திராட்சை, திணை, இட்லி, செய்முறை, திணை அரிசி, வெந்தயம், உளுத்தம் பருப்பு, திணை, இனிப்பு, புட்டு, செய்முறை, திணை மாவு, உப்பு, தேங்காய், சர்க்கரை, திணை, இனிப்பு, இடியாப்பம், செய்முறை, திணை மாவு, தேங்காய், சர்க்கரை, ஏலப்பொடி,
ஆரோக்கியம் தரும் திணை
தினை என்பது ஒரு வகை தானியமாகும். ஆங்கிலத்தில் இது மில்லட் எனும் வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ள தானியமாகும். ஆங்கிலத்தில் மில்லட்   என்பது சோளம், கம்பு கேப்பை (கேழ்வரகு) போன்ற தானிய வகையைக் குறிப்பதாகும். இதில் சைனீஸ் மில்லட், ஜெர்மன் மில்லட், ஹங்காரியன் மில்லட்,  எனும் விதம் விதமான தானியங்கள் அடங்கிய ஒரு வகைப்பாடு ஆகும். இதில் தினை என்பது நரி வாலைப் போல பச்சை நிறத்தில் காட்சியளிப்பதால் இதை ஃபாக்ஸ் டைல் மில்லட்  என அழைக்கப்படுகின்றது.
தினை உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் இரண்டாவது தானிய வகையாகும். இதில் இந்தியா இரண்டாவது இடத்தையும் சீனா முதலிடத்தையும் வகிக்கின்றன. பழங்காலத்தில் முதலாவதாக பயிரிடப்பட்டு மனிதனால் உபயோகிக்கப்பட்ட தானிய வகை தினை தான். அதுவும் 6000 கி.மு விலேயே சீனாவில் பயிரடப்பட்டு உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது.
தற்பொழுதும் சீனாவின் வட மாநிலங்களில் அதிகம் பயிரிடப்பட்டு உபயோகமாகி வரும் தானியம் தினை. தினை என்றவுடன் தமிழ் கடவுள் முருகப் பெருமான் வயதான தோற்றத்துடன் சென்று வள்ளியிடம் சாப்பிட தினை மாவு கேட்டதாகவும், பின் வள்ளியை திருமணம் செய்ததாகவும் புராணத்தில் படித்த கதைகள் நம் நினைவுக்கு வரும். இதிலிருந்து, புராண காலம் தொட்டே தினையை பயன்படுத்தி வந்தது நமக்கு புரியும்.
தினை இந்தியாவில் பயிராகும் ஒரு வகை உணவுப் பொருளாகும். தினை மாவு அதிக சத்து கொண்ட உணவுகளில் ஒன்று.
இதற்கு இறடி, ஏளல், கங்கு என்ற வேறு பெயர்களும் உண்டு.
சன்னிகரம் ஐயத் தனிவாத மும்போகுந்துன்னுபித் தத்தைமிகத் தூண்டிவிடுந் – தின்னப்பினையும் பசியாம் பெருவீக்கம் நீக்குந்தினையரிசி யின்குணத்தைத் தேர்- அகத்தியர் குணபாடம்- பொருள் – சன்னிசுரம், வளிநோய் போன்றவற்றை போக்கும். பசியுண்டாக்கும். தீக்குற்றத்தைப் போக்கும்.
உடல் வலுப்பெற
நம் முன்னோர்களின் உணவுகளான அரிசி, கேழ்வரகு, கம்பு, வரகு, தினை முதலியனவாக இருந்தது. இதனால் அவர்களின் உடலானது தேக்கு மரம் போல் திடமாக இருந்தது. இன்று இவற்றின் உணவுப் பயன்பாடு குறைந்து கடைசியாக அரிசியையும் தவிடு நீக்கி, பாலீஷ் செய்து சாப்பிடும் நிலைக்கு வந்து விட்டோம்.
இதனால் இன்று உடல் வலுவிழந்து நோயின் பாதிப்புக்கு ஆளாகிறது.
இப்படி நாம் இழந்த பொருட்களுள் தினையும் ஒன்று. மலைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேனும், தினைமாவுமே உணவாக இருந்தது. தற்போது அவர்களும், தினை என்றால் என்ன என்று கேட்கின்றனர். தினையில் உடலுக்குத் தேவையான புரத சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.
நமது வாசகர்களுக்கு உதவும் விதமக அக்காலத்தில் புகழ் பெற்ற தினையை இக்கால முறைப்படி எவ்வாறு எளிதாக தங்கள் அன்றாட உணவில் இடம்பிடிக்க வைக்கலாம் என இதோ சில யோசனைகள்.
திணை இனிப்பு பொங்கல்
தேவையான பொருட்கள்
திணை அரிசி - 200 கிராம்வெல்லம் - 300 கிராம்பாசி பருப்பு - 1/2 கரண்டிநெய் - 100 கிராம்தேங்காய் - 1/2 மூடி துருவியதுஏலக்காய் - 4 அல்லது 5முந்திரி, திராட்சை - 25 கிராம்உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
திணை அரிசியையும், பாசிபருப்பையும் மூன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். நன்றாக குழைந்து வெந்தவுடன் வெல்லம், சிட்டிகை உப்பு சேர்க்கவும். வெல்ல வாசனை மறையும் வரை நன்றாக கிளரவும். பின்பு அடுப்பிலிருந்து இறக்கி வைத்து அதனுடன் தேங்காய், ஏலக்காய், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.
திணை கார பொங்கல்

தேவையான பொருட்கள்
திணை அரிசி - 100 கிராம்பாசி பருப்பு - 50 கிராம்நெய் - 100 கிராம்மிளகு - 2 ஸ்பூன்கறிவேப்பிலை - சிறிதளவுமுந்திரி - 25 கிராம்உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
திணை அரிசியையும், பாசி பருப்பையும் மூன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். மிளகு, சீரகம், முந்திரி, கறிவேப்பிலை ஆகியவற்றை நெய்யில் வறுக்கவும். இவற்றை உப்புடன் பொங்கலில் சேர்க்கவும்.
குறிப்பு
இதனுடன் தேங்காய் சட்னி, புதினா சட்னி அல்லது சாம்பார் தொட்டு கொள்ளலாம்.

திணை இனிப்பு பனியாரம்
தேவையான பொருட்கள்
திணை அரிசி - 100 கிராம்பச்சை அரிசி - 100 கிராம்உளுத்தம் பருப்பு - 1/2 டம்ளர்வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன்வெல்லம் - 200 கிராம்
செய்முறை
திணை அரிசி, பச்சை அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் இந்நான்கையும் மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து நன்கு அரைக்கவும். தண்ணீரில் வெல்லத்தை பொடி செய்து சேர்த்து அதை அரைத்து வைத்து மாவுடன் சேர்த்து கலக்கவும். பணியார சட்டியை அடுப்பில் வைத்து அதன் குழிகளில் எண்ணெய் விட்டு வைக்கவும். அதில் மாவை ஊற்றி வேக வைக்கவும். பொன் நிறமாக வெந்தவுடன் அடுப்பிலிருந்து எடுக்கவும்.
திணை கார பனியாரம்
தேவையான பொருட்கள்
திணை அரிசி - 100 கிராம்பச்சை அரிசி - 100 கிராம்உளுத்தம் பருப்பு - 50 கிராம்வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன்உப்பு - தேவைக்கேற்ப
வறுப்பதற்கு
பெரிய வெங்காயம் - 4உளுத்தம் பருப்பு - சிறிதளவுகறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
திணை அரிசி, பச்சை அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் இந்நான்கையும் மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து அரைக்கவும். உப்பு சேர்த்து 5 முதல் 6 மணி நேரம் வரை ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு அதில் வெங்காயம், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வறுக்கவும். பின்பு அதனுடன் அரைத்து வைத்த மாவை சேர்த்து, பணியார சட்டியில் ஊற்றி, பொன் நிறமாக ஆகும் வரை வேகவிடவும்.

திணை கீரை ரொட்டி
தேவையான பொருட்கள்
திணை மாவு - 1/2 கிலோமுருங்கை இலை - 1 கட்டுநெய் - தேவையான அளவுமிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
திணை மாவு, உப்பு, மிளகுத்தூள், கீரை இவைனைத்தையும் தேவையான அளவு நீர் விட்டு பிசைந்து கொள்ளவும். பின்பு அதை உருண்டையா உருட்டி, சப்பாத்தி திரட்டவும். அடுப்பில் தவாவை வைத்து அதில் திரட்டிய சப்பாத்தியை போட்டு, அதை சுற்றி நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
திணை பூர்ண கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்
திணை மாவு - 1/2 கிலோவெல்லம் - 1/4 கிலோதேங்காய் - 2ஏலக்காய் - 5 கிராம்உப்பு - 1 சிட்டிகை
செய்முறை
தேங்காயை துருவிக் கொண்டு, வெல்லத்தை தூளாக்கிக் கொள்ளவும். மேலும் இவற்றுடன் ஏலக்காய் சேர்த்து அடுப்பில் வைத்து கெட்டியாகும் வரை கிளரவும். 1/4 லிட்டர் தண்ணீரை உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்பு திணை மாவை அதில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளரவும். அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். அதனுள்ளே செய்து வைத்துள்ள பூர்ணத்தை வைத்து உருட்டி, இட்லி தட்டிலே வைத்து வேக வைத்து எடுக்கவும்.

திணை கார கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்
திணை மாவு - 1/4 கிலோதேங்காய் - 1/2 கப்உளுத்தம் பருப்பு - 11/2 ஸ்பூன்மிளகுத்தூள் - தேவைக்கேற்பகறிவேப்பிலை - சிறிதளவுஉப்பு - தேவைக்கேற்பநெய் - தாளிப்பதற்கு

செய்முறை
திணை மாவுடன் உப்பு மற்றும் துருவிய தேங்காயை சேர்க்கவும். வாணலியிலில் நெய் விட்டு அதில் உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். திணை மாவையும் தேவையான அளவு தண்ணீரையும் சேர்த்து நன்கு கிளரவும். அடுப்பிலிருந்து இறக்கி மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லி தட்டில் வைத்து வேக விடவும்.
குறிப்பு
இதற்கு தொட்டுக் கொள்ள கொத்தமல்லி அல்லது புதினா சட்னி செய்யலாம்.
திணை பக்கோடாதேவையான பொருட்கள்
திணை மாவு - 100 கிராம்கடலை மாவு - 50 கிராம்சின்ன வெங்காயம் - 200 கிராம்இஞ்சி - சிறிய துண்டுகொத்தமல்லி - சிறிதளவுகறிவேப்பிலை - சிறிதளவுஎண்ணெய் - தேவைக்கேற்பமஞ்சள் தூள் - 1 சிட்டிகைஉப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
திணை மாவு, கடலை மாவு மற்றும் அதனுடன் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, நறுக்கிய இஞ்சி, மஞ்சள் தூள், உப்பு அனைத்தையும் ஒன்றாக கலந்து அதனுடன் 2 ஸ்பூன் சுட்ட எண்ணெய் விட்டு, தேவையான அளவு நீர் சேர்த்து பிசிறினார் போல பிசைந்து கொள்ளவும். பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள பக்கோடா மாவை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

திணை பாயாசம்
தேவையான பொருட்கள்
திணை மாவு - 200 கிராம்சர்க்கரை - 1 1/2 டம்ளர்ஏலக்காய் - 4 அல்லது 5முந்திரி - 10 கிராம்திராட்சை - 10 கிராம்நெய் - தேவைக்கேற்ப
செய்முறை
ஒரு பாத்திரத்தில் 4 டம்ளர் நீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். அதில் கழுவிய திணை அரிசியை சேர்த்து நன்கு வேக வைக்கவும். அதனுடன் சர்க்கரை சேர்த்து 10 நிமிடத்திற்கு கிளரவும். பின்பு வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். 3 நிமிடம் கழித்து ஏலப்பொடி சேர்க்கவும்.

திணை இட்லி
தேவையான பொருட்கள்
திணை அரிசி - 400 கிராம்வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன்உளுத்தம் பருப்பு - 1 டம்ளர்உப்பு - தேவைகேற்ப
செய்முறை
திணை அரிசி, வெந்தயம் ஊற வைக்கவும். உளுத்தம் பருப்பை தனியாக ஊற வைக்கவும். தனித்தனியாக அரைத்து எடுக்கவும். பின்பு இரண்டு மாவையும் உப்புடன் கலக்கவும். நான்கிலிருந்து ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும். மாவை இட்லி தட்டில் ஊற்றி வேக வைக்கவும்.
திணை இனிப்பு புட்டு

தேவையான பொருட்கள்
திணை மாவு - 1/2 கிலோசர்க்கரை - 150 கிராம்தேங்காய் - 1ஏலக்காய் - 1 சிட்டிகைஉப்பு - சிறிதளவு
செய்முறை
தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். திணை மாவுடன் உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து பிசறி வைத்துக் கொள்ளவும். பின்பு குக்கரில் வைத்து வேக வைத்து வெந்தவுடன் ஒரு தட்டில் பரப்பி வைக்கவும். அதனுடன் சர்க்கரை, துருவிய தேங்காய், ஏலப்பொடி சேர்க்கவும்.
திணை இனிப்பு இடியாப்பம்

தேவையான பொருட்கள்
திணை மாவு - 1/2 கிலோசர்க்கரை - 200 கிராம்தேங்காய் - 1ஏலக்காய் - 5 அல்லது 6உப்பு - தேவையான அளவு
செய்முறை
தண்ணீரை கொதிக்க வைத்து அதில் திணை மாவை சேர்த்து கிளரவும். அந்த மாவை இடியாப்ப அச்சில் இட்டு பிழிந்து வேக வைத்து எடுக்கவும். கடைசியாக அதில் தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலப்பொடி சேர்க்கவும்.

No comments:

vedio

film