Tuesday, July 12, 2011

ஸ்டோபெரி


நாம் உட்கொள்ளும் பழங்கள் சுவையாக இருந்தால் மட்டும் போதுமா?. நம் உடலுக்கு தேவையான பலவிதமான அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்திருக்க வேண்டாமா?

பழங்களில் செல் அழிவை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் பொருட்கள் ஏராளமாக காணப்படுகின்றன . உதாரணமாக பிற உணவுகளில் குறைந்தளவே காணப்படும் அல்லது அரிதாக காணப்படும் விற்றமின் பி6, விற்றமின் கே, அயோடின், செலினியம், ஆர்ஜினின் போன்ற பொருட்கள், உணவுப் பாதையை சீர் செய்து, இரத்த செல்களை ஒழுங்கமைத்து, தைராய்டு போன்ற நாளமில்லா சுரப்பிகள் சீராக இயங்கவும் நுண்ணிய இரத்தக்குழாய்களில் அடைப் பின்றி இரத்த ஓட்டம் செல்லவும் பயன்படுகின்றன. இந்த சத்துக்கள் குறைவாக கிடைப்பின் எமக்கு பலவித நோய்கள் உண்டாவதற்கான சந்தர்ப்பமும் ஏற்பட்டுவிடும்.
ஆகவே நாம் இது போன்ற சிறப்பான சத்துகள் நிறைந்த பழங்களை அடிக்கடி உட் கொண்டால் பலவிதமான நோய்கள் நம்மை அணுகாமல் எமது உடலை காத்து கொள்ளலாம்.

ஸ்டோபெரி பழங்களில் விற்றமின் சி, தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின், விற்றமின் ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும், செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்புஇ, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.

கோடைகாலத்தில் அடிக்கடி இந்த பழச்சாற்றை குடித்து வந்தால் தோல் வறட்சி நீங்குவதுடன்இ உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கப்பெறும்....

No comments:

vedio

film