Saturday, July 16, 2011

தர்ப்பூசணிப்பழம்

தர்ப்பூசணியில் உள்ள ஃபைட்டோ - நியூட்ரியன்ட்ஸ் என்ற சத்துக்கள், உடம்பை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றன.இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது. அதாவது, ஒரு வயாக்ரா மாத்திரையில் அடங்கியுள்ள சக்தி, தர்பூசணி பழத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது.

தர்பூசணிக்கு என்ன சிறப்பு?
தர்பூசணியில் வெறும் தண்ணீர் சத்துதான் உள்ளது. அதில் வேறு சத்து எதுவும் இல்லை என்று கூறி வந்தவர்களுக்கு இந்த புதிய தகவலை இன்ப அதிர்ச்சியாக அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். தர்பூசணிக்கு `ஆசையை' அதிகரிக்கும் ஆற்றலும் கூட உள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.
உடல் உஷ்ணத்தைத் தனித்து மனதை அமைதிப்படுத்தும் தன்மை உண்டு. பசியை அடக்க வல்லது இது, சிறுநீரை நன்கு பிரிய வைக்கும். அடி வயிறு சம்பந்தமான கோளாறுகளுடன் வயிற்று வலியையும் இது குணப்படுத்தும். இளமையையும் அழகையும் கூட்டக் கூடியது தர்பூசணி. இதை மிக்ஸியிலிட்டு அரைத்து சாறு எடுத்துக் குடிக்கலாம். ஊட்ட சத்து மிகுந்த பானம் இது.
மனித உடலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் சத்து பொருள்கள் சில காய்கறிகளிலும், பழங்களிலும் உள்ளன. தர்பூசணியில் அதுபோல் உள்ள `சிட்ரூலின்' என்ற சத்துபொருள், வயாகராவை போல் ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்குமாம். தர்பூசணியை சாப்பிட்ட பிறகு, ஏற்படும் வேதியல் மாற்றம் காரணமாக `சிட்ரூலின்', `அர்ஜினைனாக' எனும் வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. அது இதயத்துக்கும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது.
வெள்ளை பகுதியில்தான்...

இந்த சிட்ரூலின்-அர்ஜினைன் வேதி மாற்றமானது, சர்க்கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை பயக்குமாம். இதில், முக்கியமானது என்னவென்றால், தர்பூசணியில் உள்ள மேல்பகுதி அதாவது, வெண்மை பகுதியில்தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளதாம்.

இது தெரிந்தால் நம்மவர்கள், வாழைப்பழத்தை விட்டு தோலை மட்டும் சாப்பிடுவதைப் போல், தர்பூசணியின் சிவப்பு பகுதியை விட்டுவிட்டு வெறும் வெள்ளை பகுதியை மட்டுமே சாப்பிடுவார்கள் என்பது நிச்சயம்.

தர்பூசணியின் பயன்கள்:
கோடைக் காலத்தில் கிடைக்கும் தர்பூசணிப் பழம், உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடு, இரும்புச் சத்தும் நிறைந்ததாகும். இதில் இருக்கும் இரும்புச் சத்தின் அளவு, பசலைக் கீரைக்கு சமமானதாகும். மிகச்சிறந்த vitamin C யும் vitamin A (ஒரு துண்டு பழத்தில் 14.59 mg of vitamin C and 556.32 IU of vitamin A) இதில் உண்டு. இதைவிட தேவையான அளவு vitamin B6 ம் vitamin B1 ம், கனியுப்புக்களான potassium and magnesium மும் உண்டு.

பழத்தின், சிவப்பு பகுதியை மட்டும், கத்தியால் செதுக்கி எடுத்து, முள் கரண்டியால் விதைகளை நீக்கி விட்டு, துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடலாம்.
சிறிது உப்பும், மிளகுத்தூளும் அதன் மேல் தூவியும் சாப்பிடலாம்.

மிகவும் எளிமையான, புத்துணர்ச்சியூட்டும் பானமாகவும் தயாரிக்கலாம்.

விதை நீக்கப்பட்ட, தர்பூசணித் துண்டுகளை, மிக்ஸியில் போட்டு, ஒன்று அல்லது இரண்டு வினாடி ஓடவிட்டு, குளிர்பதனப் பெட்டியில் வைத்து பரிமாறலாம். விருப்பமானால், சிறிது சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு, ஒன்றிரண்டு புதினாத் தழையும் சேர்க்கலாம்.

வெப்பத்தை தணிக்க, இந்தப் பழத்தை வேண்டுமட்டும் உண்ணுங்கள்.

தோல், கொட்டை நீக்கிய தர்பூசணி துண்டுகள் - ஒரு கப், சோற்றுக் கற்றாழை ஜெல் - 2 டேபிள்ஸ்பூன் எடுத்து, கலந்து, முகத்தில் பூசி, 2 நிமிடம் நன்றாகத் தேய்த்துக் கழுவுங்கள். முகம் மெருகேறி ஜொலிஜொலிக்கும்.

வயதாவதால் ஏற்படும் முகத் தொய்வை சீர் செய்கிறது தர்பூஸ்.

ஒரு கப்பில் தர்பூசணி ஜூஸை எடுத்து, அதில் பஞ்சை நனைத்து, பஞ்சால் முகத்தை ஒற்றி எடுங்கள். 10 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவுங்கள். தினமும் இப்படிச் செய்து வர.. சருமத்தின் சுருக்கம் நீங்கும். இளமை திரும்பும். எண்ணெய்ப் பசை சருமத்தினர் அனைவருக்குமே ஏற்ற சிகிச்சை இது!

வறண்ட சருமத்தினருக்கு வேறு சிகிச்சை சொல்கிறேன்.. வாழைப் பழத் துண்டுகள் இரண்டுடன், 2 டேபிள்ஸ்பூன் தர்பூசணி விழுது கலந்து நன்றாகப் பூசுங்கள். 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால், சருமம் மிருதுவாகி மினுமினுக்கும்.

எண்ணெய்ப் பசை சருமத்தினர் 2 டேபிள்ஸ்பூன் தர்பூசணி விழுது, ஒரு டீஸ்பூன் தயிர் கலந்து முகத்தில் தடவி வர, அதிகப்படியான எண்ணெய்ப் பசை ஓடியே போகும்.

தர்பூசணி மட்டுமல்ல.. அதன் விதையும்கூட அருமையான மருந்து! கூந்தலை பராமரிப்பதில் அதற்குப் பெரும்பங்கு இருக்கிறது.
அரை கிலோ நல்லெண்ணெயில் வெந்தய பவுடர் - 50 கிராம், தர்பூசணி விதை பவுடர் - 50 கிராம் கலந்து காய்ச்சுங்கள். இந்த எண்ணெயை தலைக்குத் தேய்த்து, சீயக்காய் போட்டு, வாரம் இருமுறை குளித்து வர, கண்டிஷனிங் செய்ததுபோல கூந்தல் பளபளக்கும்.

தர்பூசணி விதை எண்ணெயும் அற்புதமான மருந்துதான் (இது கடைகளில் கிடைக்கிறது) பிறந்த குழந்தையை இந்த எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி வர, சருமம் மெருகேறி ஜொலிக்கத் துவங்கும்.

கூந்தலின் வறட்சியைப் போக்கி, மிருதுவாக்குகிறது தர்பூசணி விதை.

சீயக்காய் - 100 கிராம், தர்பூசணி விதை - 100 கிராம். வெட்டிவேர் - 20 கிராம், பயத்தம்பருப்பு - 100 கிராம்.. இவற்றை உலர்த்தி, மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். வாரம் இருமுறை இந்த பவுடரால் தலையை அலசி வர, பட்டுப் போல மின்னும் கூந்தல்.

சிலருக்கு முகத்தில் பழுப்பு நிற மங்குகள் தோன்றி அழகை கெடுக்கும். இதற்கு நிரந்தரத் தீர்வைத் தருகிறது தர்பூஸ்.

ஒரு டீஸ்பூன் கடுகு பொடியுடன், ஒரு டீஸ்பூன் தர்பூசணி ஜூஸைக் கலந்து பூசினால்.. மங்குகள் உள்ள பகுதியில் தர்பூசணியின் சாறு ஊடுருவிச் சென்று, செயல்பட்டு மங்குகளை மறையச் செய்யும்.

உடலுக்குக் குளிர்ச்சியைத் தந்து ஒரு பாதுகாப்பு வளையமாகச் செயல்படுகிறது தர்பூசணி.

2 டீஸ்பூன் கடலை மாவு (அ) பயத்தமாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தர்பூசணி விழுதைக் கலந்து, முகம் மற்றும் உடலில் தடவி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். வெயிலால் ஏற்படும் வேனல் கட்டிகள், கைகளின் கருமை, பருக்களைப் போக்கும் இந்த சிகிச்சை.

பித்தத்தைப் போக்கி பித்தப்பை கோளாறையும் நீக்கும். நல்ல பசியைத் தூண்டி விடும்.

இதில் இருக்கிற 'வைட்டமின் டி' சருமத்தை வெயிலிலிருந்து பாதுகாக்கும்.

ஜீரண சக்தியை அதிகரித்து, வயிறு எரிச்சல், வயிற்றுப் புண்ணை குணமாக்கும்.

இதில் 'ஃபோலிக் ஆசிட்' நிறைந்திருக்கிற இந்தப் பழத்தை, கர்ப்பிணிப் பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டும்.

இதயத்தைக் குளிரச் செய்து ரத்தக் குழாய்களில் இருக்கும் அடைப்பை போக்குகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

தர்பூசணி கொட்டையை காய வைத்து உடைத்து, அதில் உள்ள பருப்பை சமையலில் பயன்படுத்தி வந்தால், வயிற்றிலுள்ள பூச்சி, கிருமிகள் ஓடியே போகும்.

மலச்சிக்கலைப் போக்கும் அருமருந்து இந்த தர்பூஸ்.

ஆஸ்துமா, சளி, இருமல் இருப்பவர்கள் தர்பூசணி ஜூஸை லேசாக சூடு செய்து குடிக்கலாம்''. 

No comments:

vedio

film